கோலாலம்பூரிலிருந்து 149 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 30, 2020

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து 149 இலங்கையர்கள் இன்று காலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL319 விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.