யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி தொற்று நீக்கம்

ஜூன் 30, 2020

யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவ வீரர்கள்  யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியினை இன்று (இன்று 30) கிருமி தொற்று நீக்கம் செய்துள்ளனர்

திருநெல்வேலியில் உள்ள ஆனந்த குமாரசுவாமி பெண்கள் விடுதி மற்றும் பாலசிங்கம் ஆண்கள் விடுதி என்பவற்றுடன் கொக்குவில் புதிய பெண்கள் விடுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளும் இவ்வாறு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ் இராணுவத்தளபதி  மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களிடத்தில் பல்கலைக்கழக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கினங்க குறித்த தொற்று நீக்கப்பபணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட  இத் தொற்று நீக்கப்பபணிகளுக்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துளைப்புக்களை வழங்கியுள்ளனர்.