அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க தமிழ் தம்பதியினரின் ஒத்துழைப்பு

பெப்ரவரி 17, 2019

ஓமானில் வசிக்கும் ஒரு தமிழ் தம்பதியினரின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட புதிய வீடுகள் இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கு இலங்கை பொறியியலாளர் படை தலைமையகத்தில் அண்மையில் (பெப்ரவரி, 12) இடம்பெற்ற நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இராணுவ பொறியியலாளர்களால் வாத்துவ மற்றும் கேகாலை பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகள் இலங்கை பொறியியலாளர் படைபிரிவின் 1வது கள பொறியியலாளர் படையைசேர்ந்த இரு அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மோகன்சங்கர் தம்பதியினர் சுமார் இரண்டு மில்லியன் ரூபாவினை வழங்கி ஒத்துழைத்தமை இன நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இக்குறித்த திட்டத்தினை, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் இலங்கை பொறியியலாளர் படைகளின் கேணல் கொமடான் ஆகியோரின் முயற்சியின் பலனாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வின்போது, அங்கவீனமுற்ற யுத்த வீரர்களின் பிள்ளைகள் ஒரு குழுவினர் தெரிவு செய்யப்பட்டு கல்வி தேவைகளுக்காக ஒரு மாத கொடுப்பணவாக ஒவ்வொருவருக்கும் ரூபா 2500/= வீதம் இன் நன்கொடையாளர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, இலங்கை பொறியியலாளர்கள் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.