கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச்செய்கை

ஜூலை 01, 2020

கொழும்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணிகளில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து திட்டத்துக்கு அமைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் பயிரிடும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சீதாவாக்கை பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய விவசாய அதிகாரிகளுடன் இணைந்து சிவில் பாதுகாப்புப் படையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்டு வரும் பங்களிப்பை பாராட்டிய சீதாவக்கை பிரதேச செயலாளர் கே.எஸ். தில்ஹானி " நாட்டில் விவசாய உற்பத்தியில் நிலைபேறான தன்மை அடைவதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்பு அவசியமான ஒன்று என தெரிவித்தார்.

வெலிகண்ன, லஹிருகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் ஐந்து ஏக்கர் பயிர்ச்செய்கை காணி உழுது பயிரிடப்பட உள்ளதாக சிவில் பாதுகாப்புப் படை ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நிலந்த ரணசிங்க தெரிவித்தார்.