பொலிஸாரினால் ஹோமாகமையில் ஒருதொகை ஆயுதம் கண்டுபிடிப்பு

ஜூலை 02, 2020

களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களுடன் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹோமாகமை கெந்தளந்த பகுதியில் இன்று (ஜூலை 02) காலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பின்போது, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கியொன்று, இரண்டு டிட்டனடோர்ஸ், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, பத்து ர்பீட்டர் துப்பாக்கி, கைவிலங்கொன்று, எயார் ரைபிள் ஒன்றும்  600 துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   

ஹோமகாம பிட்டிபனாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த  சந்தேகநபர் நேற்று இரவு அதுருகிரியவில் வைத்து டீ 56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

ஹபரகட பகுதியில் வசிக்கும் 38 வயதான குறித்த சந்தேகனபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கெந்தளந்த பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.