சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2019” நிகழ்வு

பெப்ரவரி 19, 2019

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த “டே ரன் – 2019” நிகழ்வு நேற்று (பெப்ரவரி, 18) பிரசித்திபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 'விளையாட்டு மூலம் சிநேகம் கொள்வோம்' எனும் மகுட வாசகத்தினை தன்னகத்தே கொண்ட இவ்வமைப்பின் முக்கிய இலக்கு விளையாட்டு மூலம் படை வீரர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் உலக சமாதானத்திற்கு பங்களிப்பதாகும் . மேலும் இவ்வமைப்பினால் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2019” நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, இராணுவ தளபதி, லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் கபிலா ஜெயம்பதி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் சக்கர நாற்காலி வீரர்கள் உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.