என் டீ சீயின் புனர்நிர்மான பணிகளை பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்
ஜூலை 03, 2020தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கல்வித் திட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (03) அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேஜர் ஜெனரல் குணரத்ன இக்கல்லூரியின் புனரமைப்புப் பணிகளின் மற்றும் முன்னேற்ற வேலைத்திட்டங்கள் குறித்து கல்லூரியின் கமடான் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமல் கருணசேகர உட்பட விமானப்படை தளபதி, கடற்படை பிரதானி மற்றும் இலங்கை ராணுவத்தின் டி.ஜி.ஜி.எஸ் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
கட்டிடங்களின் மறுசீரமைப்பு திட்டத்தை ஆய்வுசெய்த செய்த செயலாளர், தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பாதுகாப்புச் செயலாளர் இவ்வருடம் கல்வித் திட்டங்களைத் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும், மேலும் உயர் கல்வியை தொடர்வதற்காக மாணவர்களின் உள்வாங்கல்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
‘மும்தாஜ் மஹால்’ என்று அழைக்கப்படும் முன்மொழியப்பட்ட குறித்த தேசிய பாதுகாப்பு கல்லூரி முன்னாள் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகும்.