அங்ககவீனமுற்ற இராணுவ வீரருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு பாதுகாப்பு செயலாளரால் கையளிப்பு
ஜூலை 04, 2020குருணாகல் கொகரெல்ல பகுதியில் அங்ககவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் இன்று (ஜூலை, 4 ) வழங்கிவைத்தார்.
48 வயதுடைய இராணுவ வீரரான கோப்ரல் மகிந்த எதிரிசூரிய எனும் குறித்த நபர் இப்புதிய வீட்டிற்கான திறப்பினை பாதுகாப்பு செயலாளர் குணரத்தன விடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
குறித்த வீட்டினை நிர்மாணிக்கும் பணிகள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
மகிந்த எதிரிசூரிய . 1990ஆம் ஆண்டிலிருந்து எஸ் எல் ஈ எக்ஸ் இன் 2 வது இலங்கை தேசிய காவல்படையில் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டில், திருகோணமலையில் உள்ள பாலம்போட்டார் வீதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, தனிநபர் எதிர்ப்பு கண்ணிவெடி ஒன்று வெடிதத்தத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் அவரது இரு கைகளையும் கண் பார்வையையும் இழக்க நேர்ந்தது.
இவ்வீடு கையளிக்கும் நிகழ்வில், முன்னாள் இராணுவ பிரதானியும், இலங்கை துறைமுக தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, பதில் பாதுகாப்பு பிரதானி, இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.