ஜப்பான் நாட்டிலிருந்து 261 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூலை 04, 2020

261 இலங்கையர்கள் ஜப்பான் நாட்டிலிருந்து  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூலை, 03) வந்தடைந்தனர்.

யூ எல் 455 ரக இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் 14 நாட்களுக்கு முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் இன்று பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 மத்தியநிலையம் தெரிவிக்கிறது.