தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 89 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

ஜூலை 04, 2020

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த சுமார் 89 பேர் நேற்று (ஜூலை 03) குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு 14 நாட்கள் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் இன்று பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என அடையாளம்காணப்பட்ட பின்னர் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  கொவிட் -19 மத்தியநிலையம் தெரிவிக்கிறது.

குறித்த தனிமைபடுத்தளுக்கு உட்படுத்தப்பட்டோரில்   86 ராஜகிரியவிளும் ஏனைய மூவரும் அம்பாறை தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்களாவர்.