முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொலிசாரினால் கைது

ஜூலை 05, 2020

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்த குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.  

வல்வெட்டிதுறை அம்மன் கோவிலடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அடுத்த நீதிவான் நீதிமன்ற தவணையின் போது ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.