இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1.4 பில்லியனை எட்டியது

ஜூலை 07, 2020

'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனை எட்டியுள்ளது.    

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான தனது பங்களிப்பாக 84 வயது பெண் ஆசிரியையான M.A.H.P. மாரசிங்க 200,000 ரூபாவினை புத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் கையளித்தார்.  

இதேவேளை, வெளிசர சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலை, ரூ. 135,044.53 பெறுமதியான காசோலையை ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம்  மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.பி. எகோடாவலவிடம் கையளித்தது.  

அத்துடன் அயகம பிரதேச செயலகத்தினால் 34,865.95 ரூபாவும் பேருவளை நகர சபையினால் 131,200 ரூபாவும் இந்த நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.  

மேலும் இந்த நிதியத்திற்கு இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களினால் பங்களிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இந்த நிதியத்திற்கான பங்களிப்பினை காசோலைகள், இலத்திரனியல் பண பரிமாற்றங்கள், www.itukama.lk எனும் இணையத்தளம் அல்லது #207# எனும் இலக்கத்தை டயல் செய்வதன் மூலம் வைப்புச் செய்ய முடியும்.  

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0760700700, 0112320880, 0112354340 மற்றும் 0112424012 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.