போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு அதிகாரி கைது

ஜூலை 08, 2020

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவை சேர்ந்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை   குற்றவியல் புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 07) கைது செய்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்து தொரடச்சியாக இடம்பெற்று வரும் விசாரணையில் 17 வது சந்தேகநபராக குறித்த அதிகாரி ராகமாயில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவில் இணைப்பு பெற்றுள்ள பொலிஸ் பரிசோதகர் ( ஐ பி) வசந்த குமாராவும், கடவத்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளார்.