--> -->

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்களுக்கு தடை

ஜூலை 08, 2020
  • வெலிகந்த சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 316 பேருக்கு பிசிஆர் பரிசோதனை 
  • கைதிகளை பார்வையிட வருகை தருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை சிறைச்சாலை திணைக்களம் தடை விதிப்பு 
 
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 316 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 210 பேரின் பரிசோதனை முடிவுகளின் படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைக்கப்பெறும் எனவும் சிறைச்சாலை திணைக்களத்தின் நிர்வாகப் பிரிவுக்கான ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
 
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதியுடன் தொடர்புகளைப் பேணிய 186 கைதிகள் பீசீஆர் பரிசோதனையின் பின்னர் பூணானி தனிமைப்படுத்தல் மையத்திற்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும், வெலிக்கந்த சிறைச்சாலையில் கடமையாற்றும் ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பார்வையிட வருகை தருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை சிறைச்சாலை திணைக்களம் தடை விதித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிறைச்சாலை கைதி சிகிச்சைக்காக கண்டக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.