கடந்த 24 மணித்தியாலங்களில்1,885 பேருக்கு பொலிஸார் வலை விரிப்பு

ஜூலை 08, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,855 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 189 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்ததன் பேரில் 260 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இருவேறு சோதனை நடவடிக்கைகளின்போது மேலும் 11 சந்தேகநபர்கள் 176 கிராமிற்கு மேற்பட்ட ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்ததன் பேரிலும் 163 சந்தேக நபர்கள் ஐந்து கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்ததன் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 367 பேர் 3,310 லிட்டர் சட்டவிரோத மதுபானம் மதுபானம் வைத்திருந்ததன் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்தூர துப்பாக்கி வைத்திருந்ததன் பேரில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 297 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட அதே வேளை, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 782 பேரும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.