கடல்சார் முதல் ஆவணத் தொகுதி கடற்படையினால் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிப்பு

ஜூலை 09, 2020

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கடற்பரப்பில் காணப்படும் தகவல்கள் அடங்கிய கடல்சார் முதல் ஆவணத் தொகுதி சற்று முன் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையின் கடற்பரப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய இலங்கையின் கடல்சார் ஆவணத் தொகுதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் கடல்சார் களத்தின் நீண்டகால தேவையை நிவர்த்தி செய்யும் ஒன்றாக இந்த ஆவண தொகுதி கருதப்படுகிறது.

இலங்கை கடற்படையினது கடல் வலுவின் தனித்துவமான தன்மையை சித்தரிக்கும் வகையிலும் தேசிய நலன்களில் அது கொண்டுள்ள அக்கறையை பறைசாற்றும் வகையிலும் இலங்கையின் கடல்சார் ஆவண தொகுதி பூர்த்தி செய்யப்பட்டது.


இலங்கையின் கடல்சார் ஆவண தொகுதி இணையப் பதிப்பு https://www.navy.lk/doctrine.html எனும் இணைய தள முகவரியை அணுகி பெற்றுக்கொள்ள முடியும்.