வெலிசர கடற்படை வைத்தியசாலை இன்று மீண்டும் ஆரம்பம்

ஜூலை 10, 2020

வெலிசர கடற்படை வைத்தியசாலை 77 நாட்களுக்கு பின்னர் வெளிநோயாளர்கள் சிகிச்சைகளுக்காக இன்று (ஜூலை 10) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.  

வெலிசர கடற்படை கட்டிடத்தொகுதியில் இணைப்பு செய்யப்பட படை வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து, ஏப்ரல் 24 ஆம் திகதி வெலிசர கடற்படை வைத்தியசாலையின் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

குறித்த வைத்தியசாலை வளாகத்தினுள் இன்று முழு இரவும் மகா சங்கத்தினரால் பிரித் ஓதப்பட்டு  அன்னதானமும் வழங்கப்பட்டபின்னர் இன்று அதன் அன்றாட பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக  சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.