போதைப் பொருள் வியாபாரியான கொஸ்கொட தாரகாவின் உதவியாளர் பொலிஸாரால் கைது

ஜூலை 10, 2020

போதைப் பொருள் வியாபாரியும் பாதாள உலக குற்றவாளியுமான ரோஹன பிரதீப் என அழைக்கப்படும்  “களு மல்லி”  என்பவரை நேற்று மாலை (ஜூலை, 09) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் கொஸ்கொட தாரகா எனும் பாதாள உலக குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரின் வங்கிக்கணக்கில் சுமார் 42.8 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.