கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 196 பேருக்கு கொவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி

ஜூலை 10, 2020

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள பணியாளர்கள் உட்பட அங்குள்ள ஏனைய 338 பேருக்கு நேற்று (ஜூலை, 09) மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளின் போது  196பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று (10) உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதன்பிரகாரம் புனர்வாழ்வு நிலையங்களில் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது.  

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர். அணில் ஜாசிங்கவின் தகவல்களின் பிரகாரம் புனர்வாழ்வு நிலையங்களில் மேலும் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

இதேவேளை, கொரோனா வைரஸ் சமூகங்களுக்கிடையே பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.