--> -->

ஜூலை – 10ஆம் திகதியுடன் தொப்பிகல விடுதலையின் 13ஆவது வருடம்

ஜூலை 10, 2020

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,753 அடி (534 மீட்டர் ) உயரமான மலைக்குன்றான தொப்பிகல என அறியப்படும் பரோன்ஸ் கெப் மற்றும் குடும்பிமலை இலங்கை இராணுவ வீரர்களால் கைப்பற்றப்பற்று இன்றுடன் பதின்மூன்று வருடங்களாகின்றன.   கிழக்கு பிராந்தியத்தில் இப்பகுதி தமிழீழ விடுதலை புலிகளின் கோட்டையாக விளங்கியமை குறிபிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எல் டீ டீ ஈ பயங்கரவாதிகள் தமது பதுங்கு குழிகள் மற்றும் பல்வேறு சிறு முகாம்ககளை அமைத்திருந்ததுடன், அதன் பயங்கரவாத செயற்பாடுகளில் மேலோங்கி காணப்பட்டவேளையில், இலங்கை இராணுவ வீரர்கள் அவர்களின் கொமாண்டோ படைகளுடன் தொப்பிகல பகுதியை விடுவிப்பது இலகுவான விடயமாக காணப்படவில்லை.

இருந்தபோதும் இலங்கை இராணுவத்தின் 50 கொமாண்டோ படை வீரர்கள் தொடர்ச்சியாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின்  பதுங்கு குழிகள் மற்றும் பல்வேறு சிறு முகாம்கள் அனைத்தையும் அழித்தொழித்து பயங்கரவாதிகளையும் கொன்றொழித்து ஜுலை 10, 2007 ஆம் ஆண்டு முழு கிழக்கையும் அவர்களிடமிருந்து விடுவித்தனர்.

அப்போதைய அரசு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையின் கீழ் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க இலங்கை இராணுவ வீரர்களுக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல வருட யுத்தத்தின் பின்னர் தொப்பிகல பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவித்தமையே முழு நாட்டையும் பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதற்கான முதல் வெற்றியின் அங்கமாக விளங்கியது.

இதன்பின்னரான இராணுவத்தினரின் தொடர்ச்சியான வெற்றி நோக்கிய முன்னெடுப்பானது எல் டீ டீ ஈ பயங்கரவாதத்தை முற்றாக நாட்டிலிருந்து ஒழிப்பதற்கும் வழிவகுத்தது.

இதுதொடர்பான இணைப்புகளுக்கு

http://archives.dailynews.lk/2007/07/19/news-Thoppigala06.asp
 
http://archives.sundayobserver.lk/2007/07/29/spe02.asp