இங்கிலாந்தில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஜூலை 11, 2020

இங்கிலாந்தில் சிக்கித்தவித்த மேலும் 234 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் இன்று (ஜூலை 11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளனர்.   

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவர்கள் பல மாதங்களாக அங்கு சிக்கித்தவித்தாக தெரிவித்தனர்.   

இவ்வாறு விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவரும் அங்கு பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது