தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 100 பேர் வீடு திரும்பினர்

ஜூலை 11, 2020

பலாலியில் இலங்கை விமானப்படையின் முகாமைத்துவத்தின் கீழ் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த 100 பேர் குணமடைந்து இன்று (ஜூலை 11) தமது வீடுகளுக்கு  திரும்பியுள்ளனர்.   

பனான், இலத்தின் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்களே இவ்வாறு குணமடைந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.     

இவ்வாறு தமது வீடுகளுக்கு செல்ல முன்னர் அனைவரும் பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கிறது.   

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கை விமானப்படை கட்டளை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப பலாலியில் குறித்த தனிமைப்படுத்தும் நிலையம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.