கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஜூலை 11, 2020

சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பொய்யான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்களை பரப்புவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.    

பொதுமக்களை குழப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.    

இவ்வாறு வெளியிடப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் கொரோனா வைரஸ் தொடர்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் மற்றும் அரச தகவல்கள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ  தகவல்களை கருத்திற்கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.