நடுநிலையான விசாரனைகளை முன்னெடுக்குமாறு அரச தகவல்கள் திணைக்கள பணிப்பாளர் கலுவெவ பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்

ஜூலை 11, 2020

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார். நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையானதும் நடுநிலையானதுமான ஒரு விசாரணையினை முன்னெடுக்குமாறே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று பொலிஸ் பரிசோதகர் நியுமல் ரங்கஜீவ வினால் மவ்பிம பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலளர் அகில ஜெயவர்த்தனவின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு     முறைப்படு ஒன்றை அனுப்பு வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ரங்கஜீவவினால் நீதிமன்ற வளாகத்தில்   ஊடகவியலளர் ஜெயவர்த்தனவின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதை அனைத்து ஊடகங்களிலும் காண்பிக்கப்பட்டதாகவும் கலுவெவ தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.