இலங்கையர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவருவது நிறுத்தப்பட்டுள்ளது

ஜூலை 12, 2020

கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை ஜூலை 14ஆம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் (ஒய்வு) பேராசிரியர் ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தற்காலிகமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை சுமுகமான நிலைக்கு வரும்போது மீண்டும் வழமைக்கு திரும்பும் சூழ்நிலை காணப்படும் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தலத்திற்கு தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இலங்கை எயார்லைன்ஸ் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.