கொரோன வைரஸ் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கடற்படை அவதானத்துடன்

ஜூலை 12, 2020

இலங்கை கடற்படையினர் சுமார் 7.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 52 கிலோ கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். வெற்றிலைக்கேணி உடுதுரை பகுதியில் இருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய கைவிடப்பட்டு இருந்த டிங்கியிலிருந்தே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.      

இன்று யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர் அங்கிருந்து  தப்பிச்சென்றுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொம்மண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.    

கடந்த ஆறு மாதங்களில் சுமார் மூன்று தொன் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.   

கொரோன வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறியவர்களை கைதுசெய்தமையினையும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினார்.  

கடல் வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் தமது அன்றாட கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ள அதேவேளை,  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மீனவர்கள் பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் வட கடல் பிராந்தியத்தில் இலங்கை கடற்படை அதன் கடல் ரோந்து நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தியுள்ளதாக சூரிய பண்டார மேலும் தெரிவித்தார்.