மீண்டும் தீவிரவாதத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்

ஜூலை 12, 2020

•    தீவிரவாத மதக் கொள்கைகளை பரப்புவதற்கு ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை என அரசாங்கம் தெரிவிப்பு    

தேசிய பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரிவினைவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தை மீள உருவாக்கமுயல்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.   

மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் 13 வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், பிரிவினைவாத சித்தாந்தத்துடன் கூடிய சிலர் மீண்டும் பயங்கரவாத சக்திகளுக்கு ஆர்வம் ஊட்டிவருவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் அதற்கு சாத்தியம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

கொகாவில் யுத்தத்தின்போது தனதுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் கீழ் எமது நாடும் நாட்டிலுள்ள மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளை முறியடிக்கத்தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் அரசு முன்னெடுத்துள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.   

ஜூலை 11, 1990 ஆம் ஆண்டு கொகாவில் முகாம் மற்றும் தொலைகாட்சி கோபுரத்தையும் பாதுகாக்கும் வகையில் தமது 60 பேர் கொண்ட இராணுவ வீரர்களுடன் இறுதி மூச்சிவரை போராடிய கொப்டன் சாலிய அலதெனியவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு   “1990-கொகாவில்” எனும் தொனிப்பொருளில் 30ஆவது வருட இராணுவ வீரர்களின் ஞாபகார்த்தமாக கொழும்பில் இடம்பெற்றிருந்தது.   
பயங்கரவாதிகளிடத்தில் சரணடையாமலும் கொகாவில் முகாமை கைவிடாமலும் நான்கு சிவில் பணியாளர்களுடன் தனது குழுக்களுடன் இறுதிவரை போராடி நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்தமைக்காக அவருக்கு பெருமைக்குரிய பரம வீர விபூஷன விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட முதல் வீரரே கெப்டன் அலதெனிய ஆவார்.    

நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தடையாக இருக்கும் தீவிரவாத மத சித்தாந்தங்களை பரப்புவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என்று பாதுகாப்பு செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதுடன், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் போன்றவைகளை மாத்திரம் கண்காணிப்பது மாத்திரமின்றி, இயற்கை பேரழிவுகள் மற்றும் சுகாதார பிரச்சினைகளில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கும் என்றும் குணரத்ன தெரிவித்தார்..

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்களை ஒழிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாக தெளிவுபடுத்திய பாதுகாப்பு செயலாளர், அனைத்து இலங்கையர்களும் அச்சமில்லாத நாட்டில் வாழ ஒரு பாதுகாப்பான தேசத்தை கட்டியெழுப்ப தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.   

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தமது அவையவங்களையும் உயிரையும் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய மேஜர் ஜெனரல் மூன்று வருடங்களாக நீடித்த இறுதிப் போரில் மட்டுமே சுமார் 5,900 க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

“சுமார் 28,000 க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்ததுடன், முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் சுமார்  60,000 பேர் காயங்களுக்கு உள்ளாகி தியாகங்கள் செய்ததன் காரணமாக நீங்கள் இன்று அமைதியை அனுபவித்து வருகிறீர்கள்” என்று அவர் தெரிவித்தார்.   

பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளைப் போன்று இலங்கையிலும்  யுத்தம் இல்லாத கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு செயலாளர் இதன்போது வலியுறுத்தினார்.  

"யுத்த கலாச்சாரத்தில் இராணுவத்தின் வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் தொர்டபாக முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டவேண்டும் எனவும், நாட்டைக் காப்பாற்ற நமது துணிச்சலான வீரர்கள் செய்த வீரச் செயல்களைப் பற்றி தெரிந்துகொள்ள வருங்கால சந்ததியினருக்கு அவை எழுதப்பட வேண்டும், ”என்றும்  அவர் கூறினார்.   

தான் ஒரு போர் வீரரின் தாயை சந்திப்பதில் பெருமிதம் அடைவதாக இந்திராணி அலதெனியவிடம் தெரிவித்த குணரத்ன கொகாவில் யுத்தத்தில் கொப்டன் அலதெனியவுடன் இறுதி மூச்சுவரை போராடிய ஏனைய 60 வீரர்களின் தாய்மார்களையும் இதன்போது ஞாபகப்படுத்தினார்.  

இந்நிகழ்வில், முன்னால் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் ஆர்யா அமைப்பின் தலைவர் சரித் கிரிஎல்ல ஆகியோரும் உரையாற்றினர்.