பாதாள உலக குழு உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது

ஜூலை 13, 2020

அங்கொட பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய  இன்று (ஜூலை, 13) காலை முன்னெடுக்கப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த இரு சந்தேக நபர்களும் ஹெரோயின் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கொட லொக்கா மற்றும் பேதியகோட சங்க ஆகிய பாதாள உலக  போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் குறித்த சந்தேகநபர்கள் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.