வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 ஆக அதிகரிப்பு : தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,646 ஆக உயர்வு

ஜூலை 14, 2020

கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக அதிகரித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கடந்த சில நாட்களில் 440 புதிய நோயாளர்கள் பதிவானதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,646ஐ எட்டியுள்ளது.

நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய இருவர் உட்பட 29 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 654 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.