ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 14, 2020

சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் பியால் டீ சில்வா பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (ஜூலை, 14) சந்தித்தார்.    

சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி இன்று (14) முதல் அமுலுக்கு வரும்வகையில் அட்மிரலாக ஜானதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.    

இலங்கையின் 23 ஆவது கடற்படை தளபதியாக கடந்தவருடம் (2019) ஜனவரி மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்ட அட்மிரல் பியால் டீ சில்வா  தனது 36 வருட நீண்டகால கடற்படை சேவையில் இருந்து நாளை (ஜூலை 15) ஓய்வுபெறவுள்ளார்.    

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது சேவையிலிருந்து ஒய்வு பெற்றுச்செல்லும் கடற்படை தளபதியின் சேவைகளை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர், அவரது எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய தனது  வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   

இச்சந்திப்பின்போது இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஞாபகார்த்த சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.