--> -->

எமது காலத்து போர் வீரர்........

ஜூலை 14, 2020

இலங்கை இராணுவத்தின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய ‘ஹஸலக காமினி’ என அறியப்படும் கோப்ரல் காமினி குலரத்ன, இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தாய் நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த பெருமைக்குரிய படைவீரராவார்.

 

1991ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி உயர் ரக வெடிபொருட்களுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கனரக வாகனமான புல்டோசர் ஒன்று ஆனையிறவு இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தியன் மூலம் எதிரிகளின் ஊடுருவலைத் தடுத்து சக படை வீரர்களின் உயிர்களையும்  பாதுகாத்த சுயநலலமற்ற பெருமைக்குரிய இராணுவவீரராவார்.

 

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த குலரத்னவின் ஞாபகார்த்த சிலை ஒன்று ஆணையிரவில் வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டபோது அவரால் சேதமாக்கப்பட்ட புல்டோசரும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

மறைந்த இவ்வீரரின் பாராட்டத்தக்க வீரச் செயல் காரணமாக இலங்கை இராணுவத்தின் அதி உயர் விருதான “பரம வீர விபூஷனய”  விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நான்கு சகோதர்களும் ஒரு சகோதரியும் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது மகனாக 1966ஆம் ஆண்டு பிறந்தார்.
ஹசலகவிலுள்ள ரணசிங்க பிரேமதாச மத்திய மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை பெற்றுக்கொண்ட இவர், 1987ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் 6ஆவது சிங்ஹ படைப்பிரிவில் இணைந்துகொண்டார். 

வெடிபொருட்கள் நிரப்பட்ட எல்ரீரீஈயினரின் புல்டோசர் வாகனம் ஆனையிறவு இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டபோது தன்னிடமிருந்த கைக்குண்டொன்றை வெடிக்கச்செய்து அந்த புல்டோசர் முகாமிற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் தன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார்.  

யாழ் குடாநாட்டில் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த தளமாக காணப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமினால் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னேடுப்பதட்கும்  யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இம்முகாம் ஒரு தடையாக காணப்பட்டதால அதனை முற்றுகையிடுவது புலிகளின் ஒரு முக்கிய இலக்காக காணப்பட்டது.

இதற்கமைய 1991 ஜூலை 14 திகதி இரவு சுமார் 5,000 ற்கும் அதிகமான எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் இம்முகாமை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு வெளிக்காவல் அரண்களிலும் படை வீரர்கள் கடமையில் இருந்ததுடன் இம்முகாமில் சுமார் 600 இராணுவ வீரர்கள் மாத்திரமே அன்றையதினம் இருந்ததாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இராணுவ பாதுகாப்பு அரண்களை தகர்க்கும் வகையில்  எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் தமது புதிய தந்திரோபாயங்களை பயன்படுத்தி புல்டோசர் வாகனமொன்றில் வெடிபொருட்களை நிரப்பிய வண்ணம் இராணுவ பாதுகாப்பு அரண்கள், பதுங்கு குழிகள் என்பவற்றை தகர்த்தெறிந்து இராணுவ முகாமுக்குள்  மெதுவாக முன்னேறி சென்றனர்.

 

 

குறித்த புல்டோசர் முகாமிற்குள் நுழைந்தால், தன்னுடன் தனது இராணுவ முகாமும் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த கோப்ரல் குலரத்ன, எதிரிகளின் நுழைவை தடுக்க அதனை நோக்கி விரைந்த அவர் அதனை தடுத்து நிறுத்த தனது டீ- 56 ரக ஆயுதத்தால் எதிரிகளை நோக்கி இறுதி வரை முழு மூச்சுடன் போராடினார். 

 

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளின்  புல்டோசர்

 

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளின்  புல்டோசரின் பின்புறமாக சென்ற கோப்ரல் குலரத்ன, கைக்குண்டொன்றை வெடிக்கச்செய்து அதற்குள் இருந்த நான்கு எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை கொன்றொழித்ததுடன், குறித்த   புல்டோசரை தடுத்து நிறுத்தி தனதுயிரையும் தேசத்துக்காக  அர்ப்பணித்தார்.  

நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக கடுமையாக போராடியதை நினைவுகூரும் வகையில் யுத்த வீரரான ஹசலகவின் உருவச்சிலையும் அவரினால் அழிக்கப்பட்ட புல்டோசர் வாகனமும்  ஆணையிரவு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

கோப்ரல் காமினி குலரத்தனவின் உருவச்சிலை  அவரது பிறந்த ஊரான ஹஸலகவிழும்   அமைக்கப்பட்டுள்ளது.