சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக பதிவிடும் தவறான தகவல்களை அரசு மறுக்கிறது

ஜூலை 15, 2020
  • பொது விடுமுறை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுதல் தொடர்பில் தீர்மானங்கள் இல்லை   

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில்  எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
 
கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் அவர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தாமதமின்றி உடனடியாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று (ஜூலை 14) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புகளை பேணியோர் கொவிட் – 19 கொரோனா வைரஸ்  பரப்புவோரை கைதுசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில்  பொது விடுமுறை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுதல் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பரப்பப்படுவதை அரச தகவல் திணைக்களம் மறுத்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.