இலங்கை விமானப்படையினாரல் நிர்மானிக்கப்பட மலசல கூடம் பயனாளர்களுக்கு கையளிப்பு

பெப்ரவரி 25, 2019

அம்பாறை ரஜகல முன்பள்ளியில் இலங்கை விமானப்படையினாரல் நிர்மானிக்கப்பட்ட மலசல கூட தொகுதிகள் இலங்கை விமானப்படை அம்பாறை நிலையத்தின் கட்டளைத்தளபதியினால் அண்மையில் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இம் முன்பள்ளியில் மலசல கூட தொகுதிகள் நிர்மாணிக்க தேவையான நிதியினை விமானப்படையின் நலன்புரி நிதியம் வழங்கிய அதேவேளை நிர்மாண பணிகள் விமானப்படையினால் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை விமானப்படையின் 68 வது விமானப்படை தின விழாவினை முன்னிட்டு கந்தான பிரதேச சபை விளையாட்டு மைதானம் மற்றும் ஷாந்தி முதியோர் இல்லம் ஆகியவற்றில் சிரமதானங்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் உட்பட 50ற்கு மேற்பட்ட விமானப்படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.