கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
ஜூலை 16, 2020- தற்போதைய பரவலை கட்டுப்படுத்து முறையான திட்டங்கள் வகுப்பு
- நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை கண்டறியும் பரிசோதனை நடவடிக்கைள் தொடர்கின்றன
- போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்
- தற்போதைய நிலைமை தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்கள் மயப்படுத்த கோரிக்கை
- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்படுவர் என உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,இதற்கு தேவையான அனைக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் கண்டறியப்பட்டதையடுத்து அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
கொரோனா தொற்று உலகலாவிய ரீதியில் வேகமாக பரவி வந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அந்த சவால்கள் அனைத்தும் சாதூர்யமான திட்டத்துடன் அவை ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகொள்ளப்பட்டது. அன்று தனிமைப்படுத்தல் மையங்கள் குறித்து எந்தவொரு நாட்டிலும் அறியப்படாத நிலையில் அதனை நாமே அறிமுகப்படுத்தினோம். இன்று பெரும்பாலானவர்கள் அதனை மறந்து விட்டனர்” என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, பாதுகாப்பு படையினர், புலனாய்வுதுறை மற்றும் பொலிஸாரினை உள்ளடக்கியதான ஜனாதிபதி செயலணி ஜனவரி 26ஆம் திகத ஸ்தாபிக்கப்பட்டது.
சீனாவின் வூகான் மானிலத்தில் நிர்கதியான நிலையில் இருந்த மாணவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பொறுபப்புவாய்ந்த நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.
அரச தலைமையில் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் அதற்கா அனைத்து தரப்பினரனதும் பங்களிப்புகளை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகள் சவாலை வெற்றிகொள்ள அடிப்படையாக அமைந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
74 நாடுகளிலிருந்து 16,279 பேர் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையும் 70 தனிமைப்படுத்தல் மையங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதையும் ஜனாதிபதி இதன்போது ஞாபகமூட்டினார்.
கடந்த காலங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடுகின்றபோது பிரதேசவாசிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும்போது அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. எதிர்காலத்தில் எத்தகைய தடைகள் வந்தாலும் சவால்களை வெற்றிகொண்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதனை அண்டிய நான்கு கொத்துக்ககளை உள்ளடக்கிய பிரதேசம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உருவாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருப்பதைப் போன்று எதிர்காலத்திலும் உருவாகும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பீ சீ ஆர் பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் நோய்த் தொற்று ஏற்படுவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.
நோய்த் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய இடங்களில் பீ சீ ஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, நோய்த் தொற்று பற்றிய புதிய தகவல்களையும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இணைந்ததாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இரவு, பகல் பாராது தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்கிவரும் அனைவரையும் தான் பெரிதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இக்கலந்துடையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கொரோனா வைரஸ் தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
Tamil