நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,642 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

ஜூலை 17, 2020

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,642 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இரண்டு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் 9 துப்பாக்கி ரவைகளுடன் இரண்டு சந்தேகநபர்களும் 17 கைக்குண்டுகள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர். மேலும் போதைப்பொருள் வினியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 364 சந்தேகநபர்களும் சட்ட விரோத மதுபானம் பாவனையுடன் தொடர்புடைய 281 பேரும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 719 பேரும் இந்த தேடுதல் நடவடிக்கையின்போது அந்தந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 3,857 லீட்டர் சட்டவிரோத மதுபானம், ஒரு கிலோ கஞ்சா, 13 கிராம் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 153 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil