இராணுவ சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது

ஜூலை 18, 2020

இராணுவ சீருடைகள், ஐந்து கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கி ரவைகள், நான்கு வெற்று மெகசின்கள், சட்ட விரோதமான இரண்டு கூர்மையான கத்திகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், இன்றைய தினம் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அத்துருகிரிய அரங்கல பகுதியில் வசிக்கும் 39 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.