நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 1,824சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

ஜூலை 18, 2020

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,824 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, வாள் மற்றும் சட்டவிரோத கத்திகள் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் செய்யப்பட்டனர். மேலும் போதைப்பொருள் வினியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 420 சந்தேகநபர்களும் சட்ட விரோத மதுபானம் பாவனையுடன் தொடர்புடைய 351பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 386 பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 665 பேரும் இந்த தேடுதல் நடவடிக்கையின்போது அந்தந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 3,667 லீட்டர் சட்டவிரோத மதுபானம், ஒரு கிலோ கஞ்சா, மூன்று கிராம் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 140 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.