தேடுதல் நடவடிக்கையின்போது 1,563 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

ஜூலை 19, 2020

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,563 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 771 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 792 சந்தேக நபர்களும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது இது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளில் முகக் கவசம் அணியத் தவறிய 2,093 பேர் மற்றும் சமூக இடைவெளியை பேணத் தவறிய 968 பேர் கடும் எச்சரிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.