கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 கடற்படை வீரர்களே வைத்தியசாலையில்

ஜூலை 19, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெரும்பாலான கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர். இதற்கேற்ப வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்களில் மூவர் மாத்திரமே தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையின் பின் வெளியேறும் கடற்படை வீரர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 906 கடற்படை வீரர்களில் இதுவரை 903 கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளதுடன் மூவர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.