போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிசாரினால் கைது

ஜூலை 19, 2020

பாரிய போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான சந்தேகநபரை 1 கிராம் மற்றும் 170 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பேலியகொடை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த செய்து நடவடிக்கை பண்ணிட்டியே ஆரவ்வல பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 'கொஸ்கொட தாரக' மற்றும் கங்கா ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tamil