‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ விரைவில் அமைக்கும் பொலிஸ்

ஜூலை 20, 2020

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரினால் சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ எனும் பெயரரில் விஷேட பிரிவொன்று, கொழும்பு 1, சத்தம் வீதியில் அமைந்திருக்கும் சென்றல் பொயின்ட் எனும் இடத்தில் வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.

இந்த புதிய விசாரணைப் பிரிவு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் / பொலிஸ் அத்தியட்சகர்களின் மேற்பார்வையின் கீழ் தனித்தனி உப பிரிவுகளாக வகுக்கப்பட்டு செயற்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏழு உப பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச்சொத்துக்கள் விசாரணை பிரிவு, பின்வரும் கடைமைகளை அந்தந்த உப பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கவுள்ளது.

உப பிரிவு 01

  • விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளால் சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல்.

உப பிரிவு 02

  • ·         திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொண்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை இரத்து செய்தல் மற்றும் பறிமுதல் செய்தல்.
  • ·         பிராந்திய பொலிஸ் தலைமையக, பொலிஸ் போதைப்பொருள் ஒழுப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக விசாரணைகள் செய்தல் மற்றும் நிதிமோசடி சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கல்.

உப பிரிவு 03

  • ·         பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளால் அல்லது அபாயகர ஔடதங்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தை மீறுவதன் மூலம் பெறப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை தயாரித்தல்.
  • ·         குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம், பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் மேற்படி விசாரணைகளுக்கான சட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளைத் தயாரித்தல்.

உப பிரிவு 04

  • · எம்-காஷ், ஈஸி - காஷ் போன்ற மொபைல் இலகு பணபரிமாற்றல் சேவையைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் தொலைபேசி இலக்கங்கள், வலையமைப்பு தொடர்பாக ஆய்வு செய்தல் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பிரேதச மட்டத்தில் உள்ள விசாரணை பிரிவுகள் மற்றும் ஏனைய பிரிவுகளால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.

உப பிரிவு 05

  • ·         துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் போலிக் கடவுச்சீட்டு அல்லது ஏனைய ஆவணங்கள் மூலம் குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்,

உப பிரிவு 06

  • ·         தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரம், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை மோசடிகள் தொடர்பாக பொலிசாரினால்மேற்கொள்ளப்படும்விசாரணைகளுக்குஒத்துழைப்பு வழங்குதல்.
  • ·        கணினி தரவு திருட்டு (ஹேகிங்) தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.

உப பிரிவு 07

  • ·           புலமைச் சொத்து தொடர்பான சட்ட விதிமுறை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுதல்.