ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஜூலை 20, 2020

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய   ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்ச்சரிக்கையினை  விடுத்துள்ளது.

இதன்பிரகாரம் திடீர் என சேற்று நீர் வெளியேறுதல், வீட்டுச்சுவர்கள் மற்றும் நிலவெடிப்புகள் ஏற்படுதல் என்பன மன்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளாக காணப்படுவதால் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.