தடையின்றிய தொடர்புகளுக்கு வீடியோ தொழிநுட்ப மாநாட்டு முறை ஹுவாவியினால் அறிமுகம்

ஜூலை 20, 2020

ஹுவாவி டெக்னோலஜிஸ் லங்கா தனியார் நிறுவனம் வீடியோ தொழிநுட்ப மாநாட்டு முறை ஒன்றினை மேற்கொள்வதற்கான உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு செய்துள்ளது.  

அமைச்சில் இன்று (ஜூலை 19) இடம்பெற்ற நிகழ்வின்போது,  ஹுவாவி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான லியாங் யே, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்னவிடம் இந்த உபகரணங்களை கையளித்தார்.  

ஹுவாவி தனியார் நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட இந்நவீன தொழிநுட்ப முறையிலான உபகரணங்கள் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள முப்படைகள், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் உள்ளிட்ட ஏனைய பங்குதாரர்கள் மற்றும்  நிறுவனங்களுடன் வீடியோ  மூலமான கலந்துரையாடல் மாநாடுகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.

இத்தொழிநுட்ப முறையிலான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதன் தேவை நீண்டகாலமாக உணரப்பட்டதாகவும் இதன்மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பிரதான நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன்  கலந்துரையாடல்களை மேற்கொண்டு உடனடியான மற்றும் பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என இதன்போது பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்தார்.

குறித்த வீடியோ தொழிநுட்ப மாநாடு தொடர்பான முறைமை  நிறுவப்பட்டதன் பின்னர் அதனை முகாமைதத்துவம் செய்தல் மற்றும் இயக்குதல் என்பன பாதுகாப்பு அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படும் என ஹுவாவி லங்கா வணிகக் குழுவின் பிரதித்தலைவர் இந்திக்க டீ சொய்சா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும்    ஹுவாவி நிறுவனத்தின் பிரதிப் பிரதம அதிகாரியான ரிகாடோ எக்ஸ்யாஒ  ஆகியோர் கலந்துகொண்டனர்.