வலஸ்முள்ள பகுதியில் ஆயுதங்கள் உட்பட இராணுவ சீருடைகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மீட்பு

ஜூலை 21, 2020

வலஸ்முள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தேடுதல் நடவடடிகைகள் தங்கல்லை முகாமில் கடமையாற்றும் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பாதாள உலக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ‘பரல் சுனில்’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 58 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இப்பகுதியில் உள்ளி வீடொன்றிலிருந்து வெளிநாட்டு தயாரிப்பு கைக் குண்டொன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்றும், T-56 ரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் 103 துப்பாக்கி ரவைகளும், விளையாட்டு பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும 21 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு வாள்கள், கத்தி, ஐந்து இராணுவ உருமறைப்பு சீருடைகள், உருமறைப்பு துணிகள், எட்டு இராணுவ தொப்பிகள், எட்டு பச்சை நிற முழு சீருடைகள், ஐந்து இராணுவ உருமறைப்பு டீ சேட்கள், ஐந்து இராணுவ உணவு கொள்கலன் மற்றும் இராணுவ பதக்கங்கள் என் கனவும் இதன்போது கைப்பற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.