வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் மரமுந்திரிகை நடும் திட்டம்
ஜூலை 21, 2020இலங்கை கடற்படையினர் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துடன் இணைந்து காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் மரமுந்திரிகை நடும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் வடக்கு கடற்படை கட்டளையக்த்தினால் முதல் கட்டமாக 100 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இப்பிராந்தியத்தை பசுமையாக்கள் மற்றும் கடல்வாழ் உயிர்களை பாதுகாக்கும் வகையில் சுமார் 560 மரமுந்திரிகை கன்றுகளை நட இருக்கும் இத்திட்டம் வடபிராந்திய கடற்படை கட்டளைத்தளபதியும் பிரதிப் பிரதானியுமான ரியர் எட்மிரல் கபில சமரவீரவின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நாட்டின் உலர்வலயப் பகுதிகளில் பயிரிடப்படும் இம்மரமுந்திரிகை நடுகையின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பயிராக காணப்படுகிறது.
ஏனைய வர்த்தக பயிர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் பயிராக காணப்படுகிறது.
இம்மரமுந்திரிகை கன்றுகளை பராமரிக்கும் செயற்பாடுகளை வடக்கு கடற்படை கட்டளையக காணி செயற்பாடுகளுக்கான பணியாளர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.