பாதாள உலக குற்றவாளிகளை அழைத்துவர பொலிஸார் சர்வதேச பொலிசாரின் உதவியை எதிர்பார்ப்பு
ஜூலை 23, 2020கைதுசெய்வதில் இருந்து தப்பிக்கும் வகையில் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள பதின்மூன்று பாதாள உலக குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
ல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசஷபந்து தென்னக்கோனின் தகவல்களின் பிரகாரம், ஒரு மாதத்திற்குள் சிவப்பு அறிவிப்பு விடுக்கும் வகையில் குறித்த பாதாள உலக குற்றவாளிகளின் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடமும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில், பணமோசடி சட்டத்தின் கீழ் போதைப்பொருள் மற்றும் ஏனைய பல்வேறு மோசடிகள் மூலம் சம்பாதித்த அசையாத மற்றும் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் குற்றப் புலனாய்வு பிரிவின் கீழ் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு எனும் ஒரு புதிய பொலிஸ் பிரிவு அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தருந்தார்.