ஐஸ் போதைப்பொருளுடன் கலால் திணைக்கள அதிகாரி உட்பட எட்டுப்பேர் கைது

ஜூலை 23, 2020

200 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுள் வைத்திருந்த நன்கு பெண்கள் மற்றும் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட எட்டுப்பேரை பொலிஸார் இன்று (ஜூலை 22) புத்தளப் பகுதியில் கைது செய்துள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், போதைப் பொருள் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் சந்தேக நபரான மற்றொரு கலால் திணைக்கள அதிகாரி ஒருவரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.