'இடுகம' கொவிட் -19 நிதியத்தின் மீதி 1,511 மில்லியனையும் தாண்டியுள்ளது.

ஜூலை 24, 2020

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,511  மில்லியனையும் தாண்டியுள்ளது.

இதற்கமைய தற்போது அதன் வைப்புத்தொகை மீதியாக  1,511,158,364.14, ரூபா காணப்படுகிறது.

'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி மற்றும் அந்நிய செலாவணி விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நன்கொடைகளை, காசோலைகள், தொலை பணபரிமாற்றம் மூலமாகவோ அல்லது www.itukama.lk இணையத்தளத்தினை அணுகி அல்லது # 207 # ஐ டயல் செய்வதன் மூலம் வைப்புச் செய்ய முடியும்.


மேலதிக தகவல்களுக்கு 0760 700 700, 0112 320 880, 0112 354 340 அல்லது 0112 424 012 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.