2,094 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பயுள்ளனர்

ஜூலை 24, 2020

இறுதியாக 17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை  2094 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு தள வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, பனாகொடை  இராணுவ வைத்தியசாலை ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்றுவந்தவர்களே இவ்வாறு வீடுதிரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,753 ஆக பதிவாகியுள்ளதுடன், வைரஸ் தொற்றுகுள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 63 பேர் தற்பொழுதும் குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 648 பேர் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 11 என்பது குறிப்பிடத்தக்கது.