பீ சீ ஆர் பரிசோதனைகளுக்காக கொவிட் -19 நிதியத்திலிருந்து 36 மில்லியன் ரூபா

ஜூலை 25, 2020

பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சுகாதார, சமூக, பாதுகாப்பு நிதியத்தியிலிருந்து 35,605,812.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலை நேற்று (24) மத்திய வங்கி ஆளுநர், கொவிட் – 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ சபை தலைவர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பீ சீ ஆர் பரிசோதனை, சுகாதார, பாதுகாப்பு, ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு செலவிடுவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடி வைப்பு மற்றும் பல்வேறு நன்கொடைகள் மூலம் கொவிட்- 19 நிதியம் தற்போது 1525 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.